Map Graph

இந்திரா காந்தி விளையாட்டரங்கம், விசயவாடா

இந்திரா காந்தி விளையாட்டரங்கம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசயவாடா நகரில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கம் முன்னர் நகராட்சி மைதானம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் நவம்பர் மாதம் 24, 2002 அன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. மேலும் இந்த மைதானத்தில் திசம்பர் 1997-ல் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கும் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்டம் அணிகளுக்கு இடையே பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 230 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Read article